விவகாரத்துக்கு விண்ணப்பித்த அடுத்த நொடியிலேயே நிகழ்ந்த பரிதாபம்! அப்படி என்ன தான் நடந்தது..!!

சரதோவ் நகரில் ரோமன் மின்காய்லோவ்- ஐரினா என்ற தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தையும், ஆர்யோம் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்துள்ளது. ரயில்வேயில் வேலைபார்த்து வந்த ரோமன் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒரு காதல் இருப்பதாக சந்தேகம் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக மனைவி ஐரினா விவாகரத்துக்கு விண்ணப்பிக்கப் போவதாகக் கூறிவிட்டு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.  விவாகரத்துக்கு மனைவி விண்ணப்பித்துவிட்டதை அறிந்த ரோமன், தங்களுடைய இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு, பால்கனியில் நின்று குதிக்கத் தயாராகுவது போல புகைப்படம் ஒன்றை எடுத்து மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

இதை பார்த்த ஐரீன் பதறியடித்து, வாடகைக் கார் மூலம் வந்து பார்ப்பதற்குள் 9-வது மாடியில் இருந்து ரோமன் குழந்தைகளுடன் குதித்துள்ளனர். மகள் மட்டும் உயிருடன் இருக்க அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அனால் சிகிச்சை பலனின்றி அச்சிறுமியும் உயிரிழந்துள்ளார்.

இருவருக்குமிடையே, சச்சரவு ஏற்பட்டதற்கான அறிகுறியே இல்லை என அக்கம்பக்கத்தினரும் குடும்பத்தினரும் கூறிய நிலையில், பழி அனைத்தும் தன் மனைவியின் தோள் மீதே என ரோமன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.