மீண்டும், மீண்டும் கமலை சீண்டும் அதிமுக புள்ளி.!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பசுமை என்கிற பெயரில் பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சியை துவக்கி வைத்து, உரையாற்றியதில், ” மூன்றாம் உலகப்போர் என ஒன்று ஏற்பட்டால், நிச்சயம் குடிநீருக்காக தான் இருக்கும். பல நாடுகளுக்கு இடையே குடிநீருக்காக போர் நடைபெறும் அபாய நிலை தான் தற்பொழுது இருக்கின்றது. எனவே, அனைவரும்  மழை நீரை சேமிப்போம் என்கிற உறுதிமொழியை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்.” பேசியுள்ளார்.

அதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “மாணவர்களிடையே மரம் நடும் பண்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் பள்ளியில் பசுமை நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் பிரதமர் மோடி- சீன அதிபர்  அவர்களை வரவேற்பது தான் தமிழர் பண்பாடு. நீதிமன்றத்திடம் உரிய அனுமதி பெற்று தான் பேனர் வைக்கப்படும்.

பல்டி அடித்தாலும், என்ன தோப்புக் கரணம் போட்டாலும், கமலால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது, அதிமுக அரசை விமர்சித்து காலத்தை கடத்தி விடலாம் என்று கமல் நினைத்து கொண்டிருக்கின்றார். ” என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முன்னதாக கமலை இன்ஸ்டன்ட் சாம்பார் என ஜெயக்குமார் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.