கொரவப்பொத்தான பொலிஸ் நிலையத்திற்கு காட்டில் மரத்தில் குழந்தை ஒன்றினை கடத்தி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஹொரவப்பொத்தான OIC இன்ஸ்பெக்டர் ரோஷன் சஞ்சீவா உள்ளிட்ட 30பேர் அடங்கிய பொலிஸ் குழுவினர் குறித்த காட்டில் தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது காட்டின் மரத்தின் உச்சி கிளைகளில் இருவர் இருப்பது தென்பட்டுள்ள நிலையில், பொலிசார் சுற்றிவளைத்து குறித்த நபரையும் கைகால் செயற்படாத சிறுமியை மரத்திலிருந்து கீழே இறக்கியுள்ளனர்.
இந்த நிலையில் அவரை விசாரித்த போது பொலிஸார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மரத்திலிருந்து சிறுமியை வைத்திருந்த குறித்த நபர் முப்பத்தேழு வயதான டபிள்யூ.ஏ விக்ரமசிங்க ஹொரவப்பொத்தானா புலியங்கடவாலாவில் வசிப்பவர் என்றும், விஜேசிங்கவின் மனைவி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துள்ளமையும் தெரியவந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
மனைவி இறப்பதற்கு முன் இருவரும் ஒவ்வொரு இடங்களாக கூலிவேலை செய்து வாழ்ந்துவந்துள்ளார்கள்.
இவர்களின் மகளான 5 வயதான நேத்மி கவிந்தியா எனும் சிறுமி இரு கால்களும் பிறப்பிலிருந்து முற்றிலும் முடக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் மனைவியின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து உதவியற்ற மகளோடு விஜேசிங்க தனியாக இருக்கிறார்.
ஊனமுற்ற தனது மகள் எழுந்து நடந்து செல்ல முடியாது என்பதால் விஜேசிங்க பெரும்பாலும் தினக் கூலிக்கு எந்த வேலையும் செய்கிறார், ஆனால் அவரால் குழந்தையை தனியாக விட்டுச்சென்று சம்பாதியத்தை பெறமுடியாது.
அத்துடன் அக் குழந்தையுடன் வசிப்பதற்கு அவருக்கு காணி ,வீடு வசதியின்மையால் மரங்களின் குடிசைகளில் இரவு கழிப்ப்பதாகவும் கூறிய அவர், கழிப்பறைக்குச் செல்லும்போது கூட தனது மகளை அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தான் என் குழந்தையை மிகவும் நேசிக்கிறேன் எனக்கூறிய அவர் குழந்தையின் வேலையைச் செய்ய தன்னிடம் பணம் இல்லை என்றும் குழந்தையை எங்கும் விட்டுவிட முடியாது எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இவரது துயரத்தையும் ஏழ்மையும் அறிந்த OIC எப்படியாவது அவர்களுக்கு உதவுவதாகக்உறுதி அளித்துள்ளார்.
அத்துடன் இதுபோன்ற ஆபத்தான வேலைகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் கூறிய அவர், அவர்களிற்கு தற்காலிக வீடும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கி தந்தை மகள் பாசப்பிணைப்பை பிரிக்காமல் உதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.