எரிபொருள் காலியாகி கீழே விழுந்து நொறுங்கிய விமானம்.!

இந்த உலகம் முழுவதிலும் பல்வேறு விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இவ்வாறான விபத்துகள் இன்றளவிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. விபத்துகளால் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தவிப்புகளை தவிர்க்க முடிவதே இல்லை.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான விமானம் ஒன்று., ஸ்பெயின் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகருக்கு சென்று கொண்டிருந்தது.

இந்த சரக்கு விமானத்தில் மொத்தம் 8 பேர் பயணித்த நிலையில்., இப்பயணம் மிகவும் நீண்ட தூர பயணம் என்பதால்., உக்ரைன் நாட்டில் உள்ள லீவில் நகரில் இருக்கும் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு தூக்கி செல்ல திட்டமிட்டு விமானம் கிளம்பி புறப்பட்டு சென்றது.

இந்த தருணத்தில்., துருக்கியில் இருக்கும் விமான நிலையத்தை சென்றடைய சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில்., விமானத்தின் எரிபொருள் ஆனது முழுவதுமாக காலியாகியுள்ளது.

விமானத்திலிருந்து எச்சரிக்கை அமைப்பு எரிபொருள் தீர்ந்து விட்டதை கூறியதை அடுத்து., விமானி இது தொடர்பாக அவசர எச்சரிக்கையை விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து விமானமும் வானில் இருந்து செயலிழந்து தரையை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி என்ன செய்வது என்று தெரியாமல்., அங்கு உள்ள புல்வெளியில் விமானத்தை தரையிறக்க முயற்சித்த நிலையில்., இவரது கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள காட்டு பகுதியில் விழுந்து பெரும் விபத்திற்கு உள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த சுமார் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., தகவலை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விஷயம் குறித்து விமான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.