தேவையான பொருட்கள்
உப்பு – 1/4 மேசைக்கரண்டி,
கடலை பருப்பு – ஒரு கப்.
பாகு தயாரிக்க:
மஞ்சள் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 1/4 கப்,
வெல்லம் – 1 1/2 கப்
மைதா மாவு – 2 கப்
நெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1/4 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் – 1/4 கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வாழை இலை – மாவு திரட்டுவதற்கு ஏற்ப
செய்முறை :
சுமார் அரை மணி நேரம் கடலை பருப்பை நன்றாக ஊறவைத்து, பின்னர், பருப்பைக் கொட்டி கால் கப் தண்ணீர் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து மூன்று விசில் வரும் வரை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
வெல்லப்பாகு தயாரிக்க வைத்துள்ள பொருட்களை வைத்து பாகு தயாரித்து கொள்ளவும். பின்னர், வடிகட்டிய வெல்லத்தை கொட்டி அதோடு வேக வைத்த பருப்பை நன்றாக மசித்து எடுத்து கொள்ளவும். பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் வெல்லமும், பருப்பும் நன்றாக கலந்து சற்று கெட்டிப் பதத்திற்கு வந்த பின்னர் அணைத்துவிடவும்.
மஞ்சள், மைதா மாவு, உப்பு, நெய் ஊற்றி நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளவும். அத்துடன் இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பிசையவும். மாவு இலகிய பதத்தில் இருந்தால் தான் மென்மையாக இருக்கும். பிசைந்த மாவை சுமார் கால் மணி நேரம் மூடி ஊற வைத்து கொள்ளவும்.
அதன் பின்னர் வாழை இலையில், சிறிது எண்ணெய் தடவி பிசைந்த மாவை தட்டி அத்துடன் கடலைப் பருப்பையும், உருண்டையாகப் பிசைந்து அதில் வைத்து உருட்டி பின்னர் விரல்களால் தட்டையாக தட்டிக் கொண்டே தேவையான பதத்தில் தட்டையாகத் தட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதை அப்படியே எடுத்து தோசைக் கல்லில் போட்டு நெய் தடவி காயவைத்து எடுத்தால் சுவையான பருப்பு போளி ரெடி.!