நல்லிணக்க அடிப்படையில் வெளியான கைதிகள்..!!

இந்திய திரு நாட்டின் தேசத் தந்தையான காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் வெகு விமர்சையாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் சுமார் 611 கைதிகள் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மகாத்மா காந்தியின் தற்போதைய 150-ஆவது பிறந்த நாளை அடுத்து., கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுவிக்கும் சிறப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த வருடத்தின் ஜூலை மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது.

சிறையில் நல்லிணக்க அடிப்படையில்., விடுதலை செய்யப்படும் கைதிகள் முதற்கட்டமாக 2018 அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று விடுவிக்கப்பட்டனர்.

இரண்டாவது கட்டமாக 2019 ஏப்ரல் மாதத்தின் ஆறாம் தேதி அன்று விடுவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது கட்டமாக 2019 அக்டோபர் 2 ஆம் தேதி அன்று தற்போது விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த முடிவுகளானது ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலையில்., முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் நிலையில் மொத்தம் 1424 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில்., தற்போது மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி சுமார் 611 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.