மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் இருக்கும் வில்லேபார்லே பகுதியை சார்ந்த இளம்பெண்ணான ஷ்ரத்தா (வயது 24)., தனது பெற்றோருடன் வசித்து வந்து கொண்டு இருந்தார். இவர் கடந்த 2016 ஆம் வருடத்தின் டிசம்பர் 6 ஆம் தேதியன்று., வீட்டின் மேல் தளத்தில் உறங்கிக்கொண்டு இருந்தார். இவரின் பெற்றோர்கள் கீழ் தளத்தில் இருக்கும் அறையில் உறங்கிக்கொண்டு இருந்தனர்.
இந்த தருணத்தில்., அதிகாலை சுமார் 3 மணியளவில் ஷ்ரத்தாவின் அறையில் இருந்து கரும்புகை வெளியேறியதை அடுத்து., இத்தனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்த போது., அறையில் இருந்த புத்தகங்கள் எரிந்து கரும்புகை வெளியேறியதை கண்டுள்ளனர்.
இந்த சமயத்தில்., மேலே உறங்கிக்கொண்டு இருந்த ஷ்ரத்தா நிர்வாணா நிலையில்., அவரது ஜீன்ஸ் பேண்டால் கழுத்து நெரிக்கப்பட்டு மயக்கத்தில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில்., இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்., இவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் அறிக்கையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும்., இவரது கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் தெரியவந்துள்ளது.
இதனைதொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., இவரது வீட்டிற்கு அருகில் இருந்த சுமார் 100 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., அங்கிருக்கும் கண்காணிப்பு காமிராக்களையும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் இதே பகுதியில் நகைக்கடையில் பணியாற்றி வந்த தேபாஜிஸ் (வயது 29) என்பவனை காவல் துறையினர் சந்தேகித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவாக இருந்த தேபாஜீஸை., அவனது சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் உள்ள மேதினிபூரில் வைத்து கைது செய்து மேற்கொண்ட விசாரணையில்., சம்பவத்தன்று மது போதையில் பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து., பெண்ணை கொடூரமான மற்றும் இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து., கொலை செய்ததும் தெரியவந்தது
மேலும்., இவனது காம பசி அடங்காது., இறந்த பெண்ணின் பிரேதத்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் அங்கிருந்த புத்தகங்களை எரியவைத்துவிட்டு தப்பி சென்றுள்ளான். இந்த வழக்குதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., தற்போது தேஜிபாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அபிஸ்ரீ த்யானிஷர் தேவ் உத்தரவிட்டுள்ளார்.