பிக்பாஸ் வெற்றி மகுடத்தை பெறப்போகும் போட்டியாளர் இவரா…!

பலரின் எதிர்பர்ப்பிற்கு மத்தியில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

போட்டியில் முகேன், ஷெரின், சான்டி, லொஸ்லியா என நான்கு பேர் உள்ள நிலையில் வெற்றி மகுடத்தை பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்களை மட்டுமன்றி பார்வையாளர்களிடமும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது எவிக்ட் ஆகி சென்ற போட்டியாளர்களில் சிலரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

கவின் கடந்த வாரம் வெளியேறிவிட்டதால் அவரது ஆதரவாளர்கள் லொஸ்லியா மற்றும் சான்டி ஆகிய இருவரில் ஒருவருக்கு அல்லது இருவருக்கும் பகிர்ந்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் திடீரென வெளியேறியதால், தர்ஷன் ஆதரவாளர்கள் முகேனுக்கு வாக்களிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகின்றது.

எனினும் பிக்பாஸின் தற்போதைய நிலவரப்படி லொஸ்லியா அதிக வாக்குகள் பெற்று முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் முகேனும்,மூன்றாம் நான்காம் இடங்களில் சாண்டி மற்றும் ஷெரின் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பதிவாகும் வாக்குகளின் அடிப்படையில் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும், லொஸ்லியா டைட்டிலை கைப்பற்றுவார் என உறுத்திப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்க்ஷன் பிக்பாஸ் வெற்றியாளராக வருவார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டிருந்தமை பலருக்கும் சோகத்தினை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், லொஸ்லியாதான் வெற்றியாளர் என்ற தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

இது எந்த அளவு உண்மை தன்மையான தகவல் என்பது தெரிய வில்லை. மக்களின் கருத்து கணிப்பு பலிக்குமா என்பது நாளை தான் தெரியும். ஒருவேளை லோஸ்லியா வெற்றிபெற்றால் தர்சன் வெளியேற்றப்பட்டமைக்கு சோகத்தில் உள்ள ஈழத்தமிழர்களிற்கு சிறிது ஆறுதலாவது கிடைக்கும்.