பாகிஸ்தானில் குடும்பத்தினரால் கௌரவக் கொலை செய்யப்பட்ட மொடல் அழகி காண்டீல் பலூச்சின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சகோதரன் முகமது ஆரிப்பை இன்டர்போலின் உதவியுடன் பாகிஸ்தான் பொலிசார் இன்று சனிக்கிழமை கைது செய்தனர்.
முல்தானில் உள்ள முசாபராபாத் காவல் நிலையத்தில் ஆரிஃப் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2016 ஜூலை 15ம் திகதி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பலூச்சின் கொலை வழக்கில் ஆரிஃப் ஒரு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
கொலை நடந்த ஒரு நாள் கழித்து, பலூச்சின் மற்றொரு சகோதரர் முகமது வசீம், காண்டீலைக் கொன்றதாக காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டார்.
இந்தியாவை உலகக்கிண்ணத்தில் தோற்கடித்தால் நிர்வாண படம் வெளியிடுவதாக பலூச் கூறியிருந்தார். இதன்மூலம் “பலூச் இனத்தின் பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தினார்” என குறிப்பிட்டே, குடும்பத்தினர் அவரை கொன்றனர்.
அவர் தனது சகோதரிக்கு ஒரு சமூக ஊடகத்தில் மோசமாக நடப்பதாகவும், அவளைக் கொன்றதில் எந்த குற்றமும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும், அப்போது சவூதி அரேபியாவில் இருந்த அவரது சகோதரர் முகமது ஆரிப், காண்டீலின் நடத்தை காரணமாக தான் வெட்கப்படுவதால் அவரைக் கொல்லும்படி கேட்டுக் கொண்டதாக வசீம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். பலூச்சைக் கொன்ற பின்னர் வசீமை சவுதி அரேபியாவுக்கு வருமாறு ஆரிஃப் கூறியிருந்தார்.
நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 27 அன்று, வசீமுக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது. வழக்கில் பெயரிடப்பட்ட மூன்றாவது சகோதரர் அஸ்லம் ஷாஹீன் உட்பட 5 பேர் விடுவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.