பிரபல நடிகைக்கு புதிய பதவி – மாதம் லட்சக்கணக்கில் சம்பளம்…

ஆந்திர மாநிலத்தில்  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இவர் பதவியேற்ற சில நாட்களிலேயே பல அறிவிப்புகளை வெளியிட்டு மாநிலத்தில் உள்ள மக்கள் மத்தியில் நற்பெயர் எடுத்துள்ளார். அதேசயம் 5 துணைமுதல்வர்களை நியமித்து மற்ற மாநிலங்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக உழைத்து வந்தவர் நடிகை ரோஜா. அரசியலில் இணைந்த பின்னர் அவருக்கு பல்வேறு சறுக்கல்கள் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவரது கட்சி ஆட்சிப் பதவிக்கு வந்த நிலையில், அவருக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அவருக்கு புதிய பதவி  வழங்கி மாநில அரசு உத்தவிட்டுள்ளது. அதன்படி நடிகை ரோஜா, ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்புக் கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் புதிய பதவியின்படி அவருக்கு மாதம் ரூ. 2 லட்சம் மற்றும் படிகள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.