பொதுவாக பெண்கள் எந்தெந்த நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபட விரும்புவார்கள் தெரியுமா?

தாம்பத்யம் என்பது ஆண், பெண் இருவருக்குமே மிகவும் அவசியமான அதேசமயம் அவர்கள் விரும்பும் ஒன்றாகும். கணவன், மனைவி உறவுக்குள் தாம்பத்யம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எந்த அளவிற்கு அவர்களுக்குள் தாம்பத்யம் சிறப்பாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுக்குள் நெருக்கமும், அன்பும் அதிகரிக்கும்.

பொதுவாக ஆண்கள்தான் தாம்பத்யத்தில் அதிக நாட்டத்துடன் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு நிகராக சிலசமயங்களில் ஆண்களை விட அதிகமாகவே பெண்கள் தாம்பத்யத்தில் நாட்டத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கென இதில் சில ஆசைகளும், எதிர்பார்புக்களும் இருக்கும். இந்த பதிவில் தாம்பத்யத்தில் ஈடுபட சிறந்த சமயங்கள் எதுவென்று பார்க்கலாம்.

தாம்பத்யத்தில் ஈடுபவது ரம்புகளை அமைதிப்படுத்துகிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. முக்கியமான சந்திப்புகள் முன்னரோ அல்லது அலுவலகப் பணிக்கு முன்னரோ தாம்பத்யத்தில் ஈடுபடுவது அவர்கள் மனஅழுத்தத்தை குறைத்து சிறப்பாக செயல்பட உதவுவதாக பெண்கள் கூறுகிறார்கள். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

உண்மையில் நமது உடலானது காலை நேர தாம்பத்யத்திற்காக உருவாக்கப்பட்டதாகும். டெஸ்டோஸ்டிரோன் மட்டுமின்றி காலை நேரத்தில் உங்கள் உடலின் ஆற்றல் மட்டமும் அதிகமாக இருக்கும். காலை நேர தாம்பத்யம் உங்கள் உடலில் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கும், இது நாள் முழுவதும் உங்களையும், உங்கள் துணையையும் பிணைப்புடனும், உற்சாகமாகவும் வைத்திருக்கும். காலை நேரம் 7:30 தாம்பத்யத்தில் ஈடுபடுவதற்கு மிகவும் சிறந்த நேரமென்று பாலியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.