பிரபல சீரியல் நடிகைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்த வாலிபர் கைது!

சின்னத்திரையை சேர்ந்தவர் நடிகை நிலானி. சீரியல்களில் நடித்து வரும் இவர் கணவரை பிரிந்து தன் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அவர் ஷூட்டிங்கில் இருந்த படியே போலிஸ் உடையில் பேசியதால் கைதாகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அண்மையில் வேலூரை சேர்ந்த மஞ்சுநாதன் (32) என்பவர் அறிமுகமாகியுள்ளார். வெளிநாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் அவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

மஞ்சுவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது தெரிந்து நிலானி அவரிடமிருந்து விலகியுள்ளார். இதனால் அவர் நிலானியிடம் தான் அவருக்காக செலவு செய்த பணத்தை கேட்டு சண்டை போட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் நிலானி போலிஸாரிடம் அவர் குறித்து புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த பின் சென்னை திரும்பிய மஞ்சுநாதன் மீது 3 வழக்கும் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.