பொலியாவில் கரடு முரடான மலைப் பாதையில் நடைபெற்ற சைக்கிள் பந்தயம் ஒன்றில் 70 வயது மூதாட்டி பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சுமார் 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட ஆண்டஸ்(Andes) மலைத்தொடரில் வளைவு நெளிவான பாதையில் 60 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.
மேலும், இந்த மலையில் மழை, மூடுபனி, கரடு முரடான பாறைகளுக்கு இடையே நடந்தப்பட்ட இந்த மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி மிர்தா முனோஸ் பங்கேற்றார்.
இது குறித்து, மிர்தா முனோஸ் கூறுகையில், தனது மகன் திடீரென மரணம் அடைந்ததாகவும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்காக சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட தொடங்கியதாக தெரிவித்திருந்தார்.
மேலும் தனது 6 பேரக்குழந்தைகளுடன் சைக்கிள் பந்தயம் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.