பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட மேகன் மெர்க்கலின் மருமகன்…!

பிரித்தானியா இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் சகோதரரின் மகன், நிர்வாணமாக பொலிஸாரால் இழுத்துச்செல்லப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.மேகனின் சகோதரர் Thomas Markle Jr-யின் மகனான Dooley-யே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ், Santa Monica Blvd-வில் உள்ள ஹாலிவுட் ஹோட்டலுக்கு அருகே சிறிய துண்டு மட்டுமே அணிந்த படி, Dooley அங்கும் இங்கும் நடந்தை கண்டு சந்தேமடைந்த பொலிஸார், அவரிடம் விசாரித்துள்ளனர்.

கைது செய்ய முயன்றபோது அவர் பிரச்னை செய்ததால், அதிகாரிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, Dooley மீது ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட பின்னர் Dooley-யை பொலிஸார் அழைத்து சென்று போது அவரது துண்டு கழண்டு விழுந்து நிர்வாணமாகியுள்ளார். இந்த காட்சியை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது போதையில் இருந்த Dooley தனக்குத்தானே கூச்சலிட்டுள்ளார். பொலிஸார் அவரை காரில் ஏற்றிய நேரத்தில் முழு நிர்வாணமாகயுள்ளார்.ஒரு கட்டத்தில், அவர் காரில் மிகவும் கட்டுக்கடங்காமல் நடந்ததாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சட்ட அமலாக்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.கைது செய்யப்பட்ட Dooley திங்கள்கிழமை பிணையில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.