தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித்..!

சினிமா துறையில் தல அஜித் என்று சொன்னால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் அவரது சொந்த வாழ்க்கையிலும் பல சாதனைகளை செய்து வருகிறார்.

அந்த வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பில் கோவையில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. அதில் 10 எம்ஏர் பிஸ்டல் சுற்றில் சென்னை ரைஸ் கிளப் சார்பில் நடிகர் அஜீத் கலந்து கொண்டார்.

இதை தொடர்ந்து, தேசிய அளவில் நடக்கும் துப்பாக்கிசுடும் போட்டியில் அவர் கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகியது. அதேபோல் தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ரைபிள் சுடும் சுற்றில் அஜீத்குமார் கலந்து கொண்டு வருகிறார். அதில் அஜீத் கலந்து கொண்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.