காளை விரட்டு திருவிழாவில் ஏற்பட்ட விபத்து.!

ஸ்பெயினில் நடைபெறும் பாரம்பரியமிக்க காளை விரட்டு போட்டியில் பார்வையாளர் மாடத்தினுள் புகுந்த காளைகள் முட்டியதில் பலர் காயமடைந்தனர். வடக்குப் பகுதியில் உள்ள கார்டஸ் என்னும் இடத்தில் நெடுங்காலமாக காளை விரட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது.

சென்ற சில தினங்களுக்கு முன் நடந்த இந்தப் போட்டியின் போது பார்வையாளர் மாடத்தில் புகுந்த காளை தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருந்த போதே மற்றொரு காளையும் பார்வையாளர் மாடத்திற்குள் புகுந்தது. இந்த மாடுகள் முட்டியதில் பலர் காயமடைந்துள்ளனர்