தில்ஷானின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் கிரிகெட் வீரர்!!!

இலங்கை அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் பாகிஸ்தான் துடுப்பாட்டகாரர் உமர் அக்மல், இலங்கை வீரர் தில்கரத்ன தில்ஷானின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார். லாகூரில் நேற்று நடந்த 2வது டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணியிலை வீழ்த்திய மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றி அசத்தியது.

இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டக்-அவுட்டான பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல், 2வது டி-20 போட்டியிலும் Wanindu Hasaranga வீசிய முதல் பந்திலேயே அவுட்டாகி ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச டி-20 போட்டியில் அதிக முறை டக்-அவுட்டான வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர் தில்ஷானுடன் இணைந்துள்ளார் அக்மல். இருவரும் இதுவரை 10 முறை டி-20 போட்டியில் டக்-அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளனர்.

இலங்கை அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி-20 போட்டியில், பாகிஸ்தான் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக், அக்மலுக்கு தன் திறமையை நிரூபிக்க கடைசி வாய்ப்பு அளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.