லிப்ஸ்டிக்ல இவ்ளோ விஷயம் இருக்கா …?

மேக்கப் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது லிப்ஸ்டிக் தான். என்னதான் மேக்கப் செய்தாலும் லிப்ஸ்டிக் இல்லாமல் உதடுகளைப் பார்க்க முடியாது. உங்களின் மேக்கப்பை உயர்த்திக் காட்டுவதே லிப்ஸ்டிக் தான். அப்படிப்பட்ட லிப்ஸ்டிக்க்கை உங்களின் சருமத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து உபயோகிப்பது முக்கியம். லிப்ஸ்டிக்க்கள் உங்கள் உதடுகளுக்கு வண்ணங்களைச் சேர்ப்பதால் முகத்தின் அழகை உயர்த்தி காட்டுகிறது.

நன்றாக மேக்கப் செய்து உங்கள் முகத்திற்கு சம்பந்தமில்லாத லிப்ஸ்டிக்கை அணிவதால் உங்கள் மேக்கப்பின் அழகையே கெடுத்துவிடும். அதனால் தான் உங்கள் சருமத்திற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்வது அவசியம். இங்கே உங்கள் சருமத்திற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்று சில குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின்படி சரியான லிப்ஸ்டிக்கை தேர்வு செய்து அழகாய் ஜொலியுங்கள்.

சரும நிறம் முதலில் சரியான லிப்ஸ்டிக் வண்ணத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பு உங்கள் சருமத்தின் நிறம் என்ன என்பதைக் கண்டறியுங்கள். அதாவது சருமத்தின் நிறங்கள் 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. பால் நிற வெள்ளை சருமம், வெள்ளை சருமம், நடுத்தர நிற சருமம், பழுப்பு நிற சருமம் மற்றும் கருமை நிற சருமம் ஆகும். பால் வெள்ளை மற்றும் வெள்ளை நிற சருமம் கொண்டவர்கள் பிங்க், கோரல், பீச், நியூடூ மற்றும் சிவப்பு நிறலிப்ஸ்டிக்கை தேர்வு செய்யலாம். நடுத்தர நிற சருமம் கொண்டவர்கள் ரோஸ், பெர்ரி, செர்ரி சிவப்பு, மற்றும் மெவ் நிற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யும் போது மிக அழகாகக்காட்சியளிப்பார்கள். பழுப்பு நிற சருமம் கொண்டவர்கள் கோரல், டிப் பிங்க், பிரைட் ரெட் போன்ற வண்ணங்களைத் தேர்வு செய்யலாம். ஆனால் பிரவுன் மற்றும் வைல்ட் போன்றவண்ணங்களைத் தவிர்க்கலாம். கருமை நிறம் கொண்டவர்கள் பிளம், கேரமல், ஒயின் போன்ற வண்ணங்களைத் தேர்வு செய்யலாம்.

சரும வெப்பநிலை உங்கள் சருமத்தின் வெப்பநிலையைப் பொருத்தும் நீங்கள் உங்களின் லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யலாம். மொத்தம் மூன்று வகையான சரும வெப்பநிலையில் உள்ளன.அதாவது குளிர்ந்த சருமம், வெப்பமான சருமம் மற்றும் நடுத்தர சருமம் ஆகும். குளிர்ந்த சருமம் கொண்ட பால் நிற வெள்ளை மற்றும் வெள்ளை நிறம் கொண்டவர்கள் மோச்சா அல்லது நியூடூ லிப்ஸ்டிக்கும், நடுத்தர நிறம் கொண்டவர்கள் பிங்க் அல்லது கிரண்பெர்ரி வண்ணங்களையும், பழுப்பு மற்றும் கருமை நிறம் கொண்டவர்கள் ரூபி அல்லது ஒயின் நிற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யலாம். சூடான சரும வெப்பநிலை கொண்ட பால் நிற வெள்ளை மற்றும் வெள்ளை நிறம் கொண்டவர்கள் பலே பிங்க் அல்லது பீச் நியூடூ லிப்ஸ்டிக்கும், நடுத்தர நிறம், பழுப்பு நிறம் மற்றும் கருமை நிறம் கொண்டவர்கள் செம்பு அல்லது வெண்கல நிற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யலாம். நடுத்தர சரும வெப்பநிலை கொண்டவர்கள் சூடான அல்லது குளிர்ந்த நிலையில் குறிப்பிட்டவற்றில் உங்களுக்குப் பிடித்த நிறத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

உதட்டின் வடிவம் உங்கள் உதட்டின் வடிவம் சற்று கனமாக இருந்தால் அதற்கேற்ப லிப்ஸ்டிக்கை தேர்வு செய்ய வேண்டும். அதாவது மேல் பகுதியில் கனமான உதடுகள் இருந்தால் உதடுகளின் அடிப்பகுதியில் பிரகாசமான லிப்ஸ்டிக்கும், மேல் உதட்டில் அதே நிறத்தில் சற்று இருண்ட வண்ணத்தை இடுங்கள். கீழ்ப் பகுதியில் கனமான உதடுகள் இருந்தால் உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்துவிட்டு மேல் உதட்டின் நடுப்பகுதியில் நியூடூ லிப்ஸ்டிக் போடுங்கள். மேலும் உங்களுக்குச் சமச்சீரற்ற உதடுகள் இருந்தால் உதடுகளை முதலில் லிப்ஸ்டிக் பென்சில் பயன்படுத்திக் கோடிட்டுக் கொண்டு பின்னர் லிப்ஸ்டிக் பயன்படுத்துங்கள்.

கண்களின் நிறம் கண்களின் நிறத்தை வைத்தும் லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யலாம். அதாவது உங்களின் கருவிழி என்ன நிறத்தில் உள்ளது என்று முதலில் கண்டு கொள்ளுங்கள். உங்கள் கருவிழி பிரவுன் நிறத்திலிருந்தால் பிரைட் ரெட், பிரவுன் மற்றும் லைட் பிங்க் நிறங்களையும், ப்ளூ நிற கருவிழி இருந்தால் செர்ரி நிற லிப்ஸ்டிக்கும் க்ரே நிற கருவிழி இருந்தால் நியூடூ நிற லிப்ஸ்டிக்கும், சில பச்சை நிற கருவிழி உள்ளவர்கள் பிங்க் மற்றும் டெர்ரகோட்டா நிறங்களையும் தேர்வு செய்யலாம்.
பற்களின் நிறம் உங்கள் பற்களின் நிறம் என்ன என்பதை முதலில் அறியுங்கள். அதாவது உங்கள் பற்கள் வெள்ளையாக இருந்தால் உங்களுக்குப் பிடித்த நிறத்தைத் தேர்வு செய்து மகிழுங்கள். அல்லது சற்று மஞ்சள் நிறமாக இருந்தால் பிங்க், லைட் ஆரஞ்சு, லைட் ரெட் போன்ற நிறங்களைத் தேர்வு செய்யுங்கள். ஆனால் கண்டிப்பாக ரெட், பிரவுன் போன்ற நிறங்களைத் தவிருங்கள். இப்போது உங்களுக்கு எப்படி லிப்ஸ்டிக் தேர்வு செய்வது என்ற ஐடியா கிடைத்து இருக்கும் அதன்படி தேர்வு செய்து அழகாய் ஜொலியுங்கள்.