தனுஷின் அசுரன் முதல் வார வசூல் நிலவரம்…!

தனுஷ் படங்கள் எல்லாமே இப்போது கதையே நாயகனாக இருந்து வருகிறது. அப்படி தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் அசுரன்.இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரிலீஸுக்கு முன் எப்படி இருந்ததோ அந்த அளவிற்கு வரவேற்பும் ரிலீஸிற்கு பிறகு பெற்றுள்ளது.

கண்டிப்பாக இப்படத்திற்காக தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும் என பலர் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு மக்களிடம் பாராட்டை பெற்றுள்ள இப்படம் வசூலிலும் கலக்கி வருகிறது.முதல் வார முடிவில் சென்னையில் இப்படம் ரூ. 2.24 கோடி வசூலிக்க மொத்தமாக தமிழ்நாட்டில் படம் ரூ. 20 கோடிக்கு வசூலித்துள்ளது.