வருகிறது அதிரடி சட்டம்…! அப்படி என்ன சட்டம் தெரியுமா ??

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர், திருமணம் செய்து கொண்ட பின்னர் அதை 30 நாட்களுக்குள் இந்தியாவில் பதிவு செய்யாவிட்டால் அவரின் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2019ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் திருமண மசோதா இந்திய மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவானது வெளியுறவுத் துறையின் எம்பிக்கள் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

நிலைக்குழு அந்த மசோதாவை பரிசீலித்து இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.மசோதா சட்டமானால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் திருமணம் தொடர்பாக நீதிமன்றங்களில் பிரச்னை எழுப்பப்படும் பட்சத்தில், அவர்களுடைய அசையாச் சொத்துக்கள், அசையும் சொத்துக்கள் ஆகியவற்றை நீதிமன்றம் முடக்க உத்தரவிட வதற்கும் வாய்ப்புகள் உள்ளன.வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணத்தை 30 நாட்களுக்குள் இந்தியாவில் பதிவு செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் இந்திய திருமனப் பதிவுச்சட்டத்தை மீறியதாக கருதப்படுவார், இதையடுத்து அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும்

அத்துடன் சம்பந்தப்பட்ட வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் தேடப்படும் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவிக்கவும் வாய்ப்பு உருவாகிறது. அதன் அடிப்படையில் அந்த வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.