இன்று சுவையான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்
சக்கரை – 1 கப்
நெய் – 1/4 கப்
ஏலக்காய் – 1
முந்திரி – 8
செய்முறை:
* ஒரு அடி கனமான கடாயில், ரவையை நிறம் மாறாமல், மிதமான தீயில் வறுக்கவும். ஆறவைத்து மிக்சியில் நைசாக பொடிக்கவும். சல்லடையில் சலித்துவிடவும்.
* சக்கரையையும் ஏலக்காய் சேர்த்து நன்கு நைசாகப் பொடிக்கவும். இரண்டையும் ஒரு கிண்ணத்தில் கொட்டி வைக்கவும்.
* நெய் சூடு செய்து அதில் உடைத்த முந்திரிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ரவா, சக்கரை கலவையில் சேர்த்து, கரண்டியில் கலக்கவும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், நன்கு கலந்து, உருண்டைகளாக அழுத்திப் பிடிக்கவும். உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், கூடுதலாக ஓரிரு தேக்கரண்டி சூடான நெய் சேர்த்து பிடிக்கலாம்.
* பிறகு சுவையான ரவா லட்டு தயார்.