“அன்பு எப்போதுமே அனாதை தான்” என்ற முகேனின் கூற்றை பொய்யாக்கி காட்டியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
பிக்பாஸ் வீட்டில் அபிராமியுடன் நட்பு, கோபத்தில் சேரை தூக்கியது, கட்டிலை டைத்தது என சில சர்ச்சைகளில் சிக்கினாலும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது, கைவினைப்பொருட்கள் செய்து அசத்துவது, பாடல்கள் பாடி சந்தோஷப்படுத்துவது, அனைவருக்கும் ஏற்ற நண்பனாய் பழகுவது என பலருக்கும் பிடித்த நபராக மாறினார்.
ஏன் கமலே கூட விளையாடும் நபர் என முகேனை பலமுறை பாராட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது முகேனின் கனவாக இருந்தாலும் லண்டனில் உள்ள மேடம் துஷாட்ஸ் மியூசியத்தில் தனது மெழுகுச்சிலை இடம் பெற வேண்டும் என்பது தான் அவரது ஆசையாம்.
அந்த சிலையுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அவரது லட்சியம் எனபேட்டியொன்றில் அவரே கூறியிருக்கிறார்.