இந்த வருடம் பரீட்சை எழுதிய மாணவியை குடும்பம் நடத்த அழைத்த திருமணமான சமுர்த்தி உத்தியோகத்தர்!

இவ்வருடம் உயர்தரப்பரீட்சையில் தோற்றிய மாணவியை திருமணம் செய்வதாக கூறி சமுர்த்தி உத்தியோகத்தர் அழைத்து சென்ற சம்பவத்தால் மாணவியின் குடும்பத்தினர் கடும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர்.

வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கியில் பணியாற்றும் உத்தியோகத்தரொருவரே ஓமந்தை மத்தியகல்லூரியில் இம் முறை பரீட்சையில் தோற்றி பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவியை தான் திருமணம் செய்துகொள்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த குடும்பத்தினரின் வறுமையை காரணம் காட்டி அவர்களின் வீட்டிற்கு சென்று வந்த சமுர்த்தி உத்தியோகத்தர், மாணவிக்கு ஆசை வார்த்தைகளை காட்டியே பரீட்சை முடிவடைந்ததும் அழைத்து சென்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஏற்கனவே திருமணம் முடித்து ஒரு பிள்ளையின் தந்தையென்பதுடன் அத்திருமண வாழ்க்கை விவாகரத்து வழக்கில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் காரணமாக மாணவியின் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளதுடன் தமது பிள்ளையின் எதிர்காலம் தொடாபிலும் கவலை வெளியிட்டுள்ளனர்.