உடற்பயிற்சி செய்யும்போது இதயத்துடிப்பு அதிகமாவதால் அதிக ரத்தம் உந்தப்படும். ரத்தத்தில் ஆக்சிஜன் நன்றாக கலக்கப்பட்டு உடல் முழுவதும் சீராக பரவுகிறது. உடற்பயிற்சி செய்கிறபொழுது நம் மூளையிலிருந்து எண்டார்பின் என்கிற ரசாயனம் சுரக்கப்பட்டு நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கின்றது.
மேலும் உடற்பயிற்சி தினசரி தவறாமல் செய்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சாதாரண தொற்று நோயிலிருந்து, புற்றுநோய் அபாயம் வரை நோய்கள் தவிர்க்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சிக்கென நேரத்தை செலவிட்டு உணவு முறையை சீர்படுத்துவதன் மூலம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயற்ற வாழ்க்கையை நாம் பெறமுடியும்.