ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் முதலாவது பிரதான தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்றுள்ளது.
அனுராதபுரம் – சல்காடோ மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகிய பரப்புரைக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த கூட்டத்தில் சிலர் மது போதையில் உறங்குவது மற்றும் மதுபான போத்தல்களை வாங்குவது போன்ற காட்சிகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதை அறிந்த கோத்தபாய கோபத்தின் உச்சத்தில் உள்ளதுடன் இக் கூட்டத்தின் ஏற்பாட்டானர்களிற்கு கடுமையான உத்தரவு வழங்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.