இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும்., சிலர் அலுவலகத்தில் கணினியும்., இல்லங்களில் மடிக்கணினியையும் உபயோகம் செய்து வருகின்றனர். இந்த உபயோகம் மட்டுமல்லாது தொடுதிரை அலைபேசியையும் அதிகளவு உபயோகம் செய்து வருகின்றனர். இந்த உபயோகத்தை அதிகளவு தவிர்க்க முடியாமல் வைப்பதற்கு இணையதளமும் பெரும் காரணமாக உள்ளது.
அதிகளவு கணினியை உபயோகம் செய்து கொண்டு வருவதால்., நமக்கு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் அதிகளவு ஏற்படுகிறது. கணினியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் ஆண்மைக்குறைவை ஏற்படுத்துகிறது. தசைகளில் வேதனை மற்றும் தசைகளில் சோர்வு., தோள்பட்டையில் வலி., தண்டுவடத்தின் வலி மற்றும் இடுப்பு வலி போன்றவை ஏற்படுகிறது.
இது போன்ற வலிகளுக்கு காரணமாக அதிக நேரம் இருக்கையில் அமர்ந்தவாறே கணினியில் பணி செய்து வருவதால் மேற்கூறிய வலிகள் ஏற்படுகிறது. மேலும்., இந்த பிரச்சனையை குறைப்பதற்கு அவ்வப்போது இடைவேளை எடுத்து கொள்வது உடலுக்கு நல்லது. மேலும்., கைகளை ஒரே திசையில் வைத்து பணிகளை தொடர்ந்து செய்வதால் வரும் அழுத்தம் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இந்த வலிகளில் தோள்பட்டை வலி., கழுத்து வலி., மணிக்கட்டு வலி மற்றும் தோற்பட்டை முதல் விரல்கள் வரை ஏற்படும் வலி., தசைகளில் வீக்கம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பிரச்னையை குறைப்பதற்கு அவ்வப்போது கைகளை அசைத்து., தோள்பட்டை – கைகள் – மணிக்கட்டு பகுதிகளை மென்மையாக சுழற்சி செய்து கொள்ள வேண்டும்.
இதுமட்டுமல்லாது கண்களில் கூச்சம்., கண்ணெரிச்சல்., பார்வையில் ஏற்படும் குறைபாடு., கண்களின் வளர்ச்சி., இமைகள் அடிக்கடி துடித்துக்கொண்டு இருத்தல் போன்றவை கணினியை அடிக்கடி உபயோகம் செய்வதால் ஏற்படுகிறது. கண்களில் ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய கணினியில் உள்ள அமைப்புகள் (Settings) சரி செய்து கொள்ள வேண்டும்.
அதிகளவு ஏற்படும் தோள்பட்டை வலி மற்றும் கழுத்து வலியின் காரணமாக தலைவலியும் சேர்த்து ஏற்படுகிறது. இதனால் ஓயாத வேலை மற்றும் மன அழுத்தமும் அடித்தபடியாக சேர்ந்து தலைவலியை அதிகரித்து விடுகிறது. இதனை தவிர்ப்பதற்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை எடுத்து கொண்டு., நமது குடும்பத்தோடு மகிழ்ச்சியான இடங்களுக்கு அல்லது பொது இடங்களுக்கு சென்று வரலாம்.
அதிக நேரம் அமர்ந்த நிலையில் பணியாற்றி வருவதால் உடல்நல குறைபாடு ஏற்பட்டு., இதன் தொடர்ச்சியாக உடல் பருமன் அதிகரிப்பது போன்ற பிரச்சனை ஏற்படும். இதனை குறைப்பதற்கு கணினியில் பணியாற்றும் நேரத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும். தினமும் கணினியில் பணியாற்றும் நபர்களுக்கு மனஅழுத்தம் அதிகளவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் இரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
கணினியின் தாக்கத்தில் இருந்து நமது உடலை பாதுகாத்து கொள்வதற்கு மேற்கூறியவாறு வாரத்திற்கு ஒரு முறையாவது கண்களுக்கும் – உடல்களும் ஓய்வு அளிப்பது., உடலுக்கும் – கண்களுக்கும் குளிர்ச்சி வழங்கும் வகையில் இருக்கும் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் அருந்துவது., இளநீர் குடிப்பது., அதிகளவு நீர் அருந்துவது., அவ்வப்போது எழுந்து நடந்து கொடுத்து பின்னர் பணியாற்றுவது., நன்றாக உறங்குவது உடல் நலத்திற்கு நல்லது.