தேவையான பொருட்கள் :
பாலக் கீரை பொடியாக நறுக்கியது – 1 கப்
அவல் – 1 கப்
பிரெட் துண்டுகள் – 3
அரிசி மாவு – 2 ஸ்பூன்
புளித்த தயிர் – 4 ஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுது – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன்
சாட் மசாலா – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – கால் கப்
செய்முறை :
அவலில் தண்ணீர் ஊற்றிப் பத்து நிமிடங்கள் ஊறவையுங்கள். அவல் நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து அதனுடன் பிரெட் துண்டுகளைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள்.
அதில் பிரெட் தூள், அரிசி மாவு, பாலக் கீரை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்த விழுது, உப்பு, மிளகாய்த் தூள், சாட் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள்.
அதை விருப்பமான வடிவில் கொஞ்சம் தடிமனாகப் பிடித்து, சூடான தவாவில் பரவலாக எண்ணெய்விட்டுப் போடுங்கள். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப்போட்டு நன்றாக வேகவிட்டு எடுங்கள்.