சர்வதேச செயற்பாடுகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை! பலாலி விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் மற்றும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கை வரலாற்று முதல் தடவையாக தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.