தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரானப் போட்டியின் இரண்டாம் நாளான இன்று விராட் கோலி இரட்டைச்சதம் விளாசி சாதனைகள் புரிந்து இருக்கின்றார்.
நேற்று புனே நகரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி நான்காவது வீரராகக் களமிறங்கி விளையாடி வருகின்றார். கோலி இதில் இரட்டைச்சதம் அடித்து ஆட்டத்தை தொடர்ந்து வருகின்றார். கோலிக்கு இது ஏழாவது இரட்டைச்சதம் ஆகும்.
இதன் காரணமாக அதிக இரட்டைச்சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் நான்காவது இடத்தினை பிடித்துள்ளார். விராட் கோலிக்கு முன்னதாக பிராட்மேன், சங்ககரா மற்றும் லாரா ஆகியோர் அதிக இரட்டை சாதம் அடித்த பெருமையை பிடித்துள்ளனர்.
மேலும் விராட் கோலி இந்த இரட்டைச்சதத்தின் மூலமாக டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி இருக்கின்றார்.