ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் எளிமையான நடிகர், பிரபல நடிகராக இருந்தாலும் அனைவரிடம் அன்பாக பழகுபவர். இதனால் அனைவருக்கும் இவரை பிடிக்கும்.
அஜித் எந்த படத்தில் நடித்தாலும் உடன் பணியாற்றும் நண்பர்களுக்கு தனது கையால் பிரியாணி செய்து கொடுப்பதை வழக்கமாக கொண்டவர். அதேபோல் வேதாளம் படப்பிடிப்பின் போது அனைவருக்கும் ஆசையாக பிரியாணி செய்து பரிமாறியுள்ளார்.
அந்த படத்தில் நடித்த நடிகை ஸ்ருதி ஹாசன் நான் டைட்டில் இருக்கிறேன். எனவே எனக்கு பிரியாணி வேண்டாம் என கூறியுள்ளார். உடனே அஜித் பரவாயில்லை, உங்களுக்கு மீன் பிடிக்குமா என கேட்டு அதை செய்து பரிமாறியதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.