காலி பிளவர் பொடிமாஸ் செய்வது எப்படி.?

தேவையான பொருள்கள் :

காலிஃபிளவர் – ஒரு பூ,
முட்டை – 2
வெங்காயம் – 1
மிளகுத்தூள் – 1 தே.கரண்டி,
நெய் அல்லது எண்ணெய் – 3 தே.கரண்டி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

முதலில் காலிபிளவரை நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் வானெலியில் நெய்யை ஊற்றி காலிப்ளவர் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சுமார் மூன்று நிமிடங்கள் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த பாத்திரத்தை திறந்து நன்றாக கிளறிவிட்டு, அதில் உப்பு, மிளகுத்தூள் மற்றும் முட்டையை சேர்த்து நன்றாக கிளறி, மேலும் மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.

சுமார் மூன்று நிமிடங்கள் கழித்த பின்னர் மற்றொரு முறை நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.