ஹன்சிகாவுக்கு வில்லனாக நடிக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்!!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில், தற்போது முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர். இவர்கள் வரிசையில் ஹன்சிகாவும் தன்னை முன்னிலைப்படுத்தும் கதைக்கு காத்திருந்தார்.

இப்போது அப்படி ஒரு கதையை தேர்வு செய்துள்ளார். இப்படம் பேய் கதை உடன் திகில் படமாக தயாராகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தில் பேயாக ஹன்சிகா நடித்து இருந்தார். புதிய படத்தை ஹரி அண்ட் ஹரிஷ் இயக்குகின்றனர். இவர்கள் அம்புலி, ஆ, ஜம்புலிங்கம் ஆகிய திகில் படங்களை எடுத்தவர்கள்.

இந்த படத்தில் ஹன்சிகாவுடன் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 2 இந்தி படம், 1 மலையாள படஙக்ளில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்கயுள்ளது.