ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சிக்கட்டுப்பாடுகளை மீறியது தொடர்பாக நாளை மறுநாள் ரெலோவின் அரசியல் உயர்பீடம் கூடவுள்ளது.
வவுனியாவில் நடைபெறும் கலந்துரையாடலில் சிவாஜிலிங்கத்தின் மீது எடுக்கப்படவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, நாளை சனிக்கிழமை ரெலோவின் யாழ் மாவட்ட கிளைக் கூட்டம் கூடுகிறது. சிவாஜி மீது கட்சித் தலைமை கறாரான நடவடிக்கையெடுக்கவுள்ள நிலையில், கறாரான முடிவுகள் எடுக்க வேண்டாமென யாழ் மாவட்ட குழு வலியுறுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.