தேர்தல்களை பிற்போட்ட அரசாங்கத்திற்கு, ஜனநாயகம் தொடர்பில் கதைப்பதற்கு உரிமை இல்லை என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருணாகல், வில்கொட பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்று (10) வில்கொட பகுதியில் அமைந்துள பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கை அலுவலக செயற்பாட்டாளர்களை சந்தித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர், எமது வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் 35 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளனர்.
எப்படியானாலும் அவ்வாறு நடக்க போவதில்லை. நான் ஐ.தே.க வின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை செவிமடுத்தேன். அவர்கள் 2015 ஆம் ஆண்டில் தெரிவித்த அதே கருத்துகளை தெரிவித்தனர்.
அதற்கு மாறாக அவர்கள் கடந்த நான்கரை ஆண்டுகளின் செய்தவற்றை கூறவில்லை. மத்திய வங்கியில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பிலும், நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்கியமை குறித்தும் அவர்கள் பேசவில்லை.
சில் துணிகளை விநியோகித்தமைக்காக ஜனாதிபதியின் செயலாளரை சிறையில் அடைந்தது இழிவான செயலை செய்த அரசாங்கமே இதுவாகும்.
இந்த அரசாங்கமே காமினி செனரத் செய்த சேவைகளை மறந்து அவரை தண்டித்தது. பின்னர் அவரை விடுவித்து விடுதலை செய்தாலும் அவர் இரண்டு வாரங்களாக சிறையில் இருந்தார்.
அவர் அனுபவித்த மன அழுத்ததிற்கு யார் பொறுப்பு கூறுவது? எனவே, பழிவாங்கல்கள் அவர்களின் நோக்கமாக இருந்தமையால் அவர்களால் வேலை செய்ய முடியவில்லை.
அதிவேக நெடுச்சாலை அமைப்பதில் நாங்கள் சொத்துகளை சேர்த்தாக கூறிய அவர்கள், ஆட்சிக்கு வந்து ஏழு மடங்குகளாக வருமானத்தை பெருக்கி வெறுமனே நான்கு பிரிவுகளுடன் அதனை மட்டுப்படுத்தினர். அதற்காக நான் மூன்று மடங்கு கடனை பெற்று அதனை மீள செலுத்தினேன்.
அதேபோல் எனது ஆட்சியில் அவ்வப்போது தேர்தல்களை நடத்தினேன். இவர்களை போன்று மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை பிற்போடவில்லை. இதுவா ஜனநாயகம்? எதிர்காலத்தில் இலவசமாக உரமானியத்தை வழங்குவோம், விவசாயிகளின் கடன்களை இரத்து செய்வோம், ஆகவே எம்மீது நம்பிக்கை வையுங்கள் என தெரிவித்துள்ளார்.