பல்வேறு சாதனைகள் படைத்த விராட் கோஹ்லியை புகழ்ந்து தள்ளிய இலங்கை அணித்தலைவர்

இன்றைய இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ள விராட் கோஹ்லியை இலங்கை அணித்தலைவர் பாராட்டியுள்ளார்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 601 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியின் தலைவர் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி 254 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

7000 டெஸ்ட் ஓட்டங்களை குவித்துள்ள விராட் கோஹ்லிக்கு இது ஏழாவது இரட்டை சதமாகும்.

ஏழு இரட்டை சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமைக்கு கோஹ்லி ஆளாகியுள்ளார்.

இதையடுத்து இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணரத்னே விராட் கோஹ்லியை பாராட்டியுள்ளார்.

இது குறித்த அவர் பதிவில், சந்தேகமே வேண்டாம்! கோஹ்லி 7000 ஓட்டங்கள் எடுத்ததோடு ஏழு இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அவர் ஒரு ரன் மெஷின் என பதிவிட்டுள்ளார்.