எந்த நிகழ்ச்சிக்கும் நடிகை நயன்தாரா வரவில்லை : நயன்தாராவை மறைமுகமாக தாக்கி பேசிய சிரஞ்சீவி?

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதால் படக்குழுவினர் அனைவரும் படத்தை பல நகரங்களுக்கு சென்று விளம்பரப்படுத்தினர்.

ஆனால் எந்த நிகழ்ச்சிக்கும் நடிகை நயன்தாரா வரவில்லை. தமன்னா மட்டும் அனைத்திலும் பங்கேற்றார்.

இது பற்றி பேசியுள்ள நடிகர் சிரஞ்சீவி, நடிப்பதோடு மட்டும் தங்கள் பணி முடிந்துவிட்டது என நினைத்தால் தயாரிப்பாளருக்கு கஷ்டம் தான். அவர் விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணித்தது பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை.

தமன்னாவின் கேரக்டர் தான் படத்தில் என்னுடைய கேரக்டருக்கு அடுத்து அதிகம் முக்கியத்துவம் இருந்தது என கூறிய சிரஞ்சீவி அவரது தொழில்பக்தி மற்றும் திறமையை பாராட்டியுள்ளார்.தமன்னாவை பாராட்டி நயன்தாராவை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் சிரஞ்சீவி.