தேவைப்படும் பொருட்கள் :
கோதுமை பிரெட் – 6 துண்டுகள்
மிளகுத் தூள் – 1/2 ஸ்பூன்
வெண்ணெய் – 1 ஸ்பூன்
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1
பன்னீர் – 1/2 கப்
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
செய்யும் முறை :-
தக்காளி, வெங்காயம், பன்னீர், குடைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பிரெட்டின் இரண்டு பக்கங்களிலும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ளவும்.
ஒரு வாணலிலை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து குடைமிளகாய், பன்னீர் மற்றும் தக்காளி சேர்த்து, லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, இறக்கி விட வேண்டும்.
பின்பு அந்த தக்காளி, பன்னீர் கலவையை, டோஸ்ட் செய்த ஒரு பிரட்டின் நடுவே வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி பரிமாற வேண்டும்.