பிரித்தானியாவில் இளைஞர் காதுவலியால் துடித்த நிலையில் அவர் காதுக்குள் சிலந்தி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
KENT-ஐ சேர்ந்தவர் லியம் கோமிஸ் (27). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்கதவில் அதிகளவில் சிலந்திகள் கூடுக்கட்டி இருப்பதை பார்த்தார்.
பின்னர் துடைப்பத்தால் அதையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு தனது படுக்கைக்கு தூங்க சென்றார் லியம்.
காலை தூங்கி எழுந்த போது லியமின் காது முழுவதும் அடைத்து கொண்டதோடு அதிகளவில் வலியும் ஏற்பட்டது.
மேலும் காதுக்குள் ஏதோ சத்தம் கேட்டு கொண்டே இருந்ததோடு வாந்தி மற்றும் தலைசுற்றுவது போல உணர்வு ஏற்பட்டது.
பின்னர் காது குடையும் பஞ்சால் செய்யப்பட்ட பட்ஸ் (COTTON BUD) மற்றும் குண்டூசியை காதுக்கு உள்ளே விட்டு வெளியில் எடுத்த போது அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
காரணம் அதில் சிலந்தியின் கால் வந்தது, பின்னர் தான் சிலந்தி காதுக்குள் சென்றுவிட்டது என உணர்ந்த லியம் மீண்டும் அதை உள்ளே நுழைத்து சிலந்தியை முழுவதுமாக வெளியில் எடுத்தார்.
இதன்பின்னரும் மருத்துவரிடம் லியம் செல்லவில்லை என்பது தான் ஆச்சரியம்.
தற்போது காது பிரச்னையில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள லியம் இரவில் தூங்கும் போதும் காதை மூடப்பயன்படும் EARMUFF என்பதை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.