ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் தோட்டபகுதியில் சிறியரக லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
ஹட்டனிலிருந்து வட்டவலை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியிருந்தது.
இந்த நிலையில் அதிக வேகத்தில் சென்றமையே குறித்த விபத்திற்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.