பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் பலருக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் பிடித்தமான தொகுப்பாளினி.
மேலும், 20 வருடங்களாக சின்னத்திரையில் அவர் வெற்றி நடைபோட்டு வருகின்றார். விருது விழாக்கள், போட்டியில் நடுவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமாக்களில் சில முக்கிய கதாபாத்திரங்கள் என அசத்தி ரசிகர்களை தனக்கென வைத்திருப்பவர் டிடி.
இருபது வருடங்களாக சின்னத்திரையை கலக்கியவர் என்ற அங்கீகாரமும் அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், டிடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அதில் தன்னுடைய கையில் ஸ்டிக் ஒன்றை ஊன்றியபடி போஸ் கொடுத்துள்ளார். மேலும், புன்னகைத்த வண்ணம் நின்று கொண்டிருக்கிறார். இதன் காரணமாக டிடிக்கு என்ன ஆனது என்று கேள்வி அனைவருக்கும் மேலெழும்பி இருக்கின்றது. அனைவரும் தங்களுடைய ஆறுதல் வார்த்தைகளை பதிவிட்டு வருகின்றனர்.