இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுக்களை இழந்தாலும் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலாண்டர், மகாராஜ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சுமார் 40 ஓவர்களுக்கு மேல் சந்தித்த இந்த ஜோடி 109 ரன்கள் குவித்தது. இறுதியில் அஸ்வின் இந்த ஜோடியை பிரித்தார். முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 275 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் முதல் இன்னிங்சில் 28.4 ஓவர்கள் வீசி 69 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். கேஷவ் மகாராஜ் 72 ரன்களும், கேப்டன் டூ பிளசிஸ் 64 ரன்களும் எடுக்க, பிளண்டர் 44 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்திய அணியில் மிகசிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தும், சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் தடுமாறியது ஆச்சர்யத்தை அளித்தது. இந்திய 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.