கலங்கி போன பிக்பாஸ் கவினுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய முக்கிய இயக்குனர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வருட சீசனில் காதல் மன்னன் போல வலம் வந்தவர் நடிகர் கவின். அவருக்கு தனியாக ஒரு ஆர்மி செயல்பட்டு வந்தது. நிகழ்ச்சி இறுதி சுற்றுக்கு முன் வரை அவர் வந்தார்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவர் ரூ 5 லட்சம் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தான் ஏன் சென்றேன் என்பதை அவர் வெளிப்படையாக கூறினார்.

கவின் குடும்பத்தாருக்கு சில பிரச்சனைகள் இருந்தது. இந்நிலையில் தன் அம்மா மற்றும் பாட்டி இருவரையும் அதிலிருந்து மீட்டு வந்துள்ளதை புகைப்படத்தின் வாயிலாக காட்டினார்.

அவர் பிரச்சனைகளிலிருந்து மீண்டது பலருக்கும் மகிழ்ச்சி. அதே வேளையில் பிக்பாஸ் வீட்டில் நடந்த போன நிகழ்வுகள் அவரின் முகம் வாடியும், உடல் தோற்றம் மெலிந்தும் காணப்பட்டார்.

இந்நிலையில் அவரை வாழ்த்தி அவர் நடித்த நட்புனா என்னணு தெரியுமா பட இயக்குனர் சிவா அரவிந்த் பதிவிட்டுள்ளார். இதில் அவர் உனக்கும் எல்லா நல்லதும் நடக்கும், நாம் மகிழ்ச்சியானதை பேசுவோம், கவலை படாதே, சந்தோசமாக இரு, டிவிட்டரில் உனக்க காத்திருக்கிறேன், போலி ID களை நம்பவேண்டாம், ஒவ்வொரு பயத்தை அழிக்கவும், கவலைகளை மறைக்கவும், சிரிப்பு தான் சிறந்த வழி என கூறியுள்ளார்.