விஜய்யின் பிகில் டிரைலர் செய்த மாஸான சாதனை!

பிகில், வெறித்தனம் இந்த வார்த்தைகள் டிவிட்டரில் அதிகம் ஹேஷ் டேக்கில் இடம் பெற்றுள்ளன. விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்துள்ளது.

வந்த சில நிமிடங்களிலே லட்சக்கணக்காக லைக்குகளை அள்ளி சாதனை படைத்தது. பல லட்சம் பார்வைகளையும் கடந்துவிட்டது. இந்நிலையில் டிரைலரை வெளியிட்ட சோனி மியூசிக் நிறுவனம் தற்போது ரியல் டைம் சாதனை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

மதியம் 12 மணி நேர நிலவரப்படி 1.6 மில்லியன் லைக்குகளையும், 17 மில்லியன் பார்வைகளையும் கடந்து சாதனை படைத்துள்ளது.