பிரபல தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ஷெரீன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.
இவர் பிக்பாஸ் பட்டத்தை ஜெயிக்கவில்லை என்றபோதிலும், நான்காவது இடத்தை பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த பொழுது ஒரு முறை தான் வளர்க்கும் நாயை மிகவும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு மகிழ்ச்சியோடு வெளியேறிய ஷெரின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். பிக்பாஸ் வீட்டை விட்டு சென்ற பின்னர் அவரது நாய் ஓடி வந்து என்னுடன் விளையாடும் வீடியோவை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.
இது தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய ஆசைக்குரியவரிடம் விளையாடுவதற்கும் அவர் தெரிவித்து பெருமிதம் கொள்கிறார்.
Finally, seeing my boy after a longg longgg longgg time! My little therapy dog❤#BiggBossTamil #BiggBossTamil3 pic.twitter.com/h0q4ChC1bQ
— Sherin Shringar (@SherinOffl) October 12, 2019