தேவதர்ஷினிக்கு அடித்த செம்ம ஆபர்!

தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களையும், குழந்தைகளையும் தனது காமெடி மூலம் சிரிக்க வைத்தவர் நடிகை தேவதர்ஷினி. இவர் சினிமா மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் திரிஷாவுக்கு தோழியாக நடித்திருந்தார். 96 படத்தில் அவரது இளம் வயது தோற்றத்தில் தேவதர்ஷியின் மகள் நடித்திருந்தார். தாய் மற்றும் மகளை  இருவரையும் ஒரே படத்தில் பார்த்ததில் பலருக்கும் மகிழ்ச்சி.

தற்போது தேவதர்ஷினி The Family Man என்னும் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே இதில் நடிகை சமந்தாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது..

இந்தியில் எடுக்கப்படவுள்ள இந்த சீரியல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.