செம்பருத்தி பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் அனைத்து புண்களும் விரைவில் ஆறும். ஒரு மாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் மகரந்தக் காம்பு உலர்திய தூள் 5 கிராம் பாலில் சாப்பிட மலடு நீங்கும்.
செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி ரத்தத்தில் இருக்கும் நஞ்சுகளை வெளியேற்றும்.
தங்கச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். 10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும். நீர்த்துப்போன விந்து கெட்டி படும்.
பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட்டு வருவதால் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும். இருதய நோய் ரத்த அழுத்த நோய் குணமடையப் பயன்படும்.
பூவை நீரிட்டுக்காச்சி வடிகட்டிப்பாலும் சர்கரையும் சேர்த்து காலை மாலை பருக மார்புவலி, இதய பலவீனம் தீரும்.
செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலையில் இருக்கும் பேன்கள் தொல்லை நீங்கும்.
பூவை நல்லெண்ணெய்யில் காய்ச்சி தடவ முடி வளரும். செம்பருத்தி பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி புட்டிகளில் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால் தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.