பிளேடால் அறுத்து சிறுவன் செய்த காரியம்.!

மதுரையில் பள்ளி மாணவன் முதுகை பிளேடால் கீறிய சக மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் மறவ பட்டியை சேர்ந்த சரவணகுமார். அதே வகுப்பில் அவருடன் பயின்று வரும் சக மாணவர் ஒருவர் பாடவேளையின்போது சரவணகுமாரின் புத்தகப்பையை மறைத்து வைத்து ஆட்டம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்ததும், அதை சரவணகுமார் தட்டிக் கேட்டபோது மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமுற்ற மாணவர் மறைத்து வைத்திருந்த பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்து விட்டு தப்பியோடினார்.

இதனையடுத்து மாணவர் சரவணகுமார், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.