இளைஞர்களுக்கு மாதம்தோறும் 15 ஆயிரம் ரூபாய்!

அரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 24 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், அரியானா மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வரும் நிலையில், இந்திய தேசிய லோக்தளம் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் முதியோர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பென்ஷன் தொகை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.