முதன்முறையாக நடிகை எமி ஜாக்சன் தமிழ் திரைப் படத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் படத்தில் தான் நடித்தார். அதன் பின்னர் ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து இருக்கின்றார்.
தமிழில் இறுதியாக ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் தான் நடித்தார். அதன் பின்னர் எந்த திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை. நடிப்பை விடுத்து எமி லண்டன் சென்றார். அங்கே தொழிலதிபர் ஒருவரை தீவிரமாக காதலித்து எமி திருமணத்திற்கு முன்னதாகவே கர்ப்பம் ஆகினார்.
இதனை தொடர்ந்து பல்வேறு புகைப்படங்களை தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியீட்டு வாழ்த்துக்களை பெற்றார். சென்ற மாதத்தில் ஆண் குழந்தை ஒன்றை அவர் பெற்றெடுத்தார். எப்பொழுதும் வித்தியாசமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது அவர் வழக்கமாக கொண்டிருப்பார்.
இந்நிலையில், குழந்தை பிறந்து சில வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில் தன்னுடைய தோழியுடன் இணைந்து உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இப்படிப்பட்ட புகைப்படம் அவசியம் தானா என ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.