சினிமா பிரபலங்களுக்கென்ன ஜாலியான வாழ்க்கை என நினைக்கிறோம். ஆனால் அவர்களுக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு. சிலர் சர்ச்சைகளிலும் குற்ற சம்பவங்களிலும் சிக்குகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகை அமீஷா படேல் செக் மோசடி குற்ற வழக்கில் சிக்கியுள்ளார். ஃபைனாசியர் அஜய் சிங் என்பவர் அமீஷா மீது ராஞ்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதில் அமீஷாவும் அவரின் பாட்னர் குணால் என்பவரும் படத்திற்காக 2018 ல் ரூ 2.50 கோடி பணம் என்னிடம் பெற்றனர். ஆனால் படம் வெளிவரவில்லை.
பணத்திற்காக அவர்களை தொடர்பு கொண்ட போது ரூ 3 கோடிக்கான செக் கொடுத்தனர். ஆனால் செக் பௌன்ஸ் ஆகிவிட்டது. இதற்காக தொடர்பு கொண்ட போது அவர்களை என் தொலைபேசி அழைப்பை நிராகரித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த ராஞ்சி நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அமீஷா புதிய கீதை படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.